போலீஸாக அஜித்… ‘வலிமை’யில் அந்த ‘பிக் பாஸ்’ நடிகையா?
July 21, 2020 / 08:53 PM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.
இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேசி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது.
பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. தற்போது, இந்த படத்தில் ஒரு ‘பிக் பாஸ்’ பிரபலம் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மோகன் லால் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ சீசன் 1-யில் ரன்னர்-அப்பாக வந்த நடிகை பியர்லே மானே (Pearle Maaney), ‘வலிமை’யில் மிக சிறிய ரோலில் நடித்திருக்கிறாராம்.