நாடு முழுவதும் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் பிரச்சனை கொரோனா பாதிப்பு. இதைவிட சமீபத்தில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தை கீழ்த்தனமாக விமர்சனம் செய்து வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு நாடுமுழுவதும் முருக பக்தர்கள் மட்டுமின்றி, தமிழ் ஆர்வலர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சாதாரண மக்கள் கூட இந்த பிரச்சினைக்காக குரல் கொடுத்தார்கள்.
இதனையடுத்து தமிழக அரசு கருப்பர் கூட்டம் சேனல் உரிமையாளர்களை கைது செய்தது மட்டுமல்லாமல் அந்த சேனலில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கிவிட்டார்கள்.
இதைப் பற்றி தற்போது கருத்து தெரிவித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ” கந்த சஷ்டி கவசத்தை மிகக்கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாத படி, தவறு செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்கு தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி. இனிமேலாவது மதத் துவேஷமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும். ஒழியனும். எல்லா மதமும் சம்மதமே. கந்தனுக்கு அரோகரா!!” என்று பதிவிட்டுள்ளார்.ரஜினியின் இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.