பூர்ணிமா பாக்யராஜ் பிறந்தநாளுக்கு மகன் சாந்தனுவின் பதிவு!
July 27, 2020 / 05:21 PM IST
|Follow Us
நடிகர் சாந்தனு பாக்யராஜ் லாக்டவுனில் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வருகிறார். அதுமட்டுமின்றி தனது மனைவி கிகி விஜய்யுடன் சேர்ந்து ஒரு குறும்படமும் வெளியிட்டார். இது அவர்களது ரசிகர்களிடைய தற்போது வைரலாகி வருகிறது.
தற்போது சாந்தனு தனது அம்மா பூர்ணிமா பாக்கியராஜ் பிறந்தநாளையொட்டி, இன்று ட்விட்டரில் ஒரு வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியுமென்றால் அது ஒரு தாயின் வடிவத்தில் மட்டுமே…பியூர்ஸ்ட் ஃபார்ம் ஆஃப் லவ் ..அம்மா.. பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகர் சாந்தனு தனது மனைவியுடன் குறும்படம் வெளியிட்டது மட்டுமல்லாமல், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான “ஒரு சான்ஸ் கொடு” என்ற சிங்கிள் பாடலில் நடிகர் கலையரசனுடன் சேர்ந்து நடனம் ஆடியிருந்தார். இவர்களின் இந்தப் பாடலில் சாந்தனு தனது நடன அசைவுகளுக்காக மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டார். இந்த பாடலில் நடிகை மேகா ஆகாஷ் நடித்திருந்தார்.
அதுமட்டுமின்றி லாக்டவுனில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சாந்தனு தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தும் வருகிறார். தற்போது தனது தாயின் பிறந்தநாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள இந்தப் பதிவில் பூர்ணிமா பாக்யராஜின் பழைய புகைப்படமும் தற்போது தனது தாயுடன் சாந்தனு நடனமாடும் புகைப்படமும் இருக்கிறது.
தற்போது சாந்தனு பாக்கியராஜ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்துள்ளார்கள். அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி ஸ்ரீஜர் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “முருங்கைக்காய் சிப்ஸ்” என்ற படத்திலும் சாந்தனு நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் பாக்கியராஜ், அதுல்யா ரவி, யோகி பாபு, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.