யாரையாவது சார்ந்து நிற்பது பெண்களின் கெட்ட பழக்கம்… ‘ஜாங்கிரி’ மதுமிதா வெளியிட்ட வீடியோ!
July 29, 2020 / 05:35 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ‘ஜாங்கிரி’ மதுமிதாவிற்கு இன்று (ஜூலை 29-ஆம் தேதி) பிறந்த நாளாம். 2012-ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மதுமிதா. இதில் ‘ஜாங்கிரி’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்த மதுமிதா, அதிக கவனம் ஈர்த்தார்.
அதன் பிறகு ‘அட்டகத்தி, ராஜா ராணி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜில்லா, காக்கி சட்டை, காஞ்சனா 2, டிமான்ட்டி காலனி, காஷ்மோரா, கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், விஸ்வாசம்’ போன்ற பல படங்களில் நடித்தார். தற்போது, ‘ஜாங்கிரி’ மதுமிதா நடிப்பில் ‘ஆயிரம் ஜென்மங்கள், டிக்கிலோனா, டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இப்போது ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ஜாங்கிரி’ மதுமிதா தனது ட்விட்டர் பக்கத்தில் “படப்பிடிப்பு இல்லாத, குறைந்த நாட்களில் பைக் ஓட்டவும், கார் ஓட்டவும் கற்றுக் கொண்டுவிட்டேன். எப்போதும் யாரையாவது சார்ந்து நிற்பது பெண்களின் கெட்ட பழக்கம்! நம்மால் இயலும் என்ற நம்பிக்கையோடு பயிற்சி மேற்கொண்டேன். மற்றொரு ஓட்டுநர் இல்லாமல் பயணிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், அவர் பைக் ஓட்டும் வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.
படப்பிடிப்பு இல்லாத, குறைந்த நாட்களில் பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டுவிட்டேன்.
எப்போதும் யாரையாவது சார்ந்து நிற்பது பெண்களின் கெட்ட பழக்கம்! நம்மால் இயலும் என்ற நம்பிக்கையோடு பயிற்சி மேற்கொண்டேன். மற்றொரு ஓட்டுநர் இல்லாமல் பயணிக்கிறேன். வீடியோ நாளை வெளியாகும். pic.twitter.com/X03XluoNwP