பாடும் நிலா எழுந்து வா… SPB-க்காக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியான அறிக்கை!
August 20, 2020 / 02:13 PM IST
|Follow Us
தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் இதுவரை 16 இந்திய மொழிகளில் 40000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இவர் ‘கேளடி கண்மணி, திருடா திருடா, காதலன், நாணயம்’ போன்ற பல படங்களில் நடிகராகவும் வலம் வந்திருக்கிறார்.
சமீபத்தில், ‘கொரோனா’வால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவ குழுவினர் இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். நேற்று இயக்குநர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில் “ஆகஸ்ட் 20-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 6.05 வரை பாடகர் எஸ்.பி.பி-யின் உடல் நிலை சீக்கிரமாக குணமாக நாம் அனைவரும் இணைந்து கூட்டுப் பிரார்த்தனை செய்ய வர வேண்டும் என திரைத் துறையினரையும், இசை விரும்பிகளையும் கேட்டுக் கொள்கிறேன்.
அவரவர் இடத்திலிருந்து எஸ்.பி.பி-யின் பாடலை ஒலிக்க விடுவதின் மூலம் இந்தப் பிரார்த்தனையை செய்வோம். அவரது குரல் மீண்டும் நம்மிடையே கேட்பதை உறுதி செய்வோம். இந்த கூட்டுப் பிரார்த்தனைக்கு உலகமெங்கும் வாழும் மக்களை அன்புடன் அழைக்கிறேன்” என்று கூறியிருந்தார். தற்போது, இது தொடர்பாக நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பாடும் நிலா… எழுந்து வா! கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்…. எஸ்.பி.பியை மீட்டெடுப்போம். 20.08.2020 இன்று மாலை 6:00 மணி முதல் 6:05 வரை” என்று கூறப்பட்டுள்ளது.