“நான் இந்த படத்தில் நடிக்கவில்லை”- விளக்கம் கொடுத்துள்ள முகேன்!
August 29, 2020 / 04:53 PM IST
|Follow Us
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் வெற்றி பெற்றதன் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் முகேன்.
சமீபத்தில் நடிகர் முகேன் வளர்ந்து வரும் நடிகையான சிவானி நாராயணனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி பரவி வந்தது.
தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த செய்தி உண்மை அல்ல என்றும், தான் இனிமேல் நடிக்கவிருக்கும் படங்கள் மற்றும் யாருடன் அடுத்து பணிபுரிவேன் என்ற அப்டேட்களை தானே வெளியிடுவேன் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் அனைவரது அக்கறைக்கும் வாழ்த்துக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றி என்றும் கூறியுள்ளார்.
இதனால் சிவானியுடன் இணைந்து முகேன் நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் வெப்பம் படத்தின் இயக்குனரான அஞ்சனா அலிகானின் அடுத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தியும் தற்போது பரவி வருகிறது.
மலேசியாவை பூர்வீகமாக கொண்ட முகேன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றது மட்டுமல்லாமல் பாடகராகவும் சிங்கிள் பாடல்களை வெளியிட்டு புகழ் அடைந்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது கூட தனது கம்போசிங்கில் வெளியான “என்ன மறந்த” என்ற பாடலை பாடி புகழ்பெற்றார். அழகான குரலுக்கு சொந்தக்காரரான முகேனுக்கு நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம்.
சில படங்களில் கமிட்டாகி உள்ளார் என்ற செய்தி பரவி வந்தாலும் இவரே அதற்கான அப்டேட்களை வெளியிடுவேன் என்று கூறியுள்ளதால் ரசிகர்கள் அதற்காக காத்திருக்கிறார்கள்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.