முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பாரதிராஜா!
August 31, 2020 / 07:40 PM IST
|Follow Us
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக லாக்டோன் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டது. குறிப்பாக சினிமா துறையில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது, திரையரங்குகள் மூடப்பட்டது.
இதனால் சினிமாவில் பணிபுரியும் கடைசிகட்ட தொழிலாளிகளுக்கு ஒருவேளை உணவுக்கு கூட கஷ்டம் வரும் அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டது. சில பிரபலங்கள் முன்வந்து அவர்களுக்கு உதவி செய்தாலும் அவை போதுமானதாக இருக்கவில்லை.
தற்போது தமிழக அரசு சில கடுமையான விதிமுறைகளை பின்பற்றி பின்பு படப்பிடிப்பு நடத்தலாம் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இதனால் சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
பெரிய படப்பிடிப்புகள் தொடங்கி சின்ன படப்பிடிப்புகள் வரை இனிமேல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நன்றி தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் அவர் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் குறிப்பிட்டு “தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்களின் சங்கத்தின் வேண்டுகோளின்படி இருட்டில் இருந்த எங்களுக்கு வெளிச்சத்திற்கு வழிகாட்டிய விதிகளை தளர்த்தி அனுமதி அளித்த முதலமைச்சர் அவர்களுக்கும், எங்கள் குறைகளை காது கொடுத்து கேட்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு புதிய அறிக்கையில், தங்கள் வேண்டுகோளுக்கிணங்கி திரைப்பட படப்பிடிப்புகள் நடத்துவதற்கு அனுமதி அளித்ததை போல விரைவில் தக்க விதிமுறைகளோடு திரையரங்குகள் திறக்கப்படுவதற்காக ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
இதனால் தற்போது திரைப்பட படப்பிடிப்புகளின் ஏற்பாடுகள் சூடு பிடித்துள்ளதாம் திரைத்துறையில். விரைவில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படத்தின் வேலைகள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளின் படி, இருட்டிலிருந்த வெளிச்ச உலகிற்கு ஒளி காட்டிய விதிகளைத் தளர்த்தி அனுமதியளித்த முதல்வர் @CMOTamilNadu அவர்களுக்கும், எங்கள் குறைகளை காதுகொடுத்து கேட்கும் அமைச்சர் @Kadamburrajuofl அவர்களுக்கும் நன்றி.@tfapatn
Thanks letter from Director Bharathiraja President TFAPA to Hon’ble Chief Minister Thiru . Edapadi K.Palanisamy & Hon’ble Information & Broadcasting Minister Thiru Kadambur Raju. @offBharathiraja@tfapatnpic.twitter.com/1mZTo9JDdT