நாடு முழுவதும் கொரானா வைரஸ் தாக்குதல் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் அரசு திரைப்பட படப்பிடிப்புகள் நடப்பதற்கு அனுமதி வழங்கியது. குறிப்பிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி படப்பிடிப்பு நடத்தவும், 75 பேர் கொண்ட குழுவுடன் படப்பிடிப்பு நடக்கலாம் என்றும் கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து வருகிற அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகள் திறக்கப்படுவதற்காக வாய்ப்பும் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து அரசு எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியிடாத நிலையில் திரையரங்குகள் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அப்படியே திரையரங்குகள் திறக்கப்பட்டால் தயாரிப்பாளர்கள் க்யூப் கட்டணங்களை செலுத்த முடியாத நிலையில் இருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் இதை ஏற்றுக்கொண்டு புதிய படங்களை வெளியிடுவார்களா என்ற கேள்வியும் தற்போது நிலவி வருகிறது.
இதனால் வருகிற அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகள் திறக்கப்படுமா அப்படியே திறக்கப்பட்டால் புது படங்கள் வெளியாகுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.