கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரசிகர்… ரஜினியின் ஆடியோவை கேட்டவுடன் நடந்த அதிசயம்!
September 17, 2020 / 09:00 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், மும்பையில் உள்ள ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் நேற்று மாலை ட்விட்டரில் “தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25K என்ற நிலை உருவாக்கி கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்” என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட ஒரு ஆடியோ பதிவில் “முரளி, நான் ரஜினிகாந்த் பேசுறேன்.
உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா, தைரியமா இருங்க. நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் குணமடைஞ்சு நீங்க வீட்டுக்கு வந்துவிடுவீங்க. நீங்கள் குணமடைஞ்சு வந்த பிறகு, ப்ளீஸ் எங்க வீட்டுக்கு குடும்பத்தோட வாங்க. நான் உங்களைப் பார்க்கணும். தைரியமா இருங்க. நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன். தைரியமாக இரு கண்ணா, தைரியமாக இரு. வாழ்க” என்று கூறினார். தற்போது, அந்த ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஆசிர்வாதம் கிடைத்தது, அதிசயம் நடந்தது அற்புதம் நிகழ்ந்தது. கொரோனா நெகடிவ் வந்தது. தலைவர் காவலர்களின் பிரார்த்தனையால் எனது கிட்னியும் சரி ஆகி மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
@rajinikanth தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25K என்ற நிலை உருவாக்கி கொடு.உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம் pic.twitter.com/dupA7HUS9a