எதிர்பார்த்ததை விட சிறப்பான ஒரு அப்டேட்…. ‘வலிமை’ வில்லன் போட்ட ட்வீட்!
September 22, 2020 / 02:03 PM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.
ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது.
‘வலிமை’ படத்தின் புதிய ஷெடியூல் ஷூட்டிங்கை இம்மாத (செப்டம்பர்) இறுதியில் ஆரம்பிக்க இயக்குநர் ஹெச்.வினோத் ப்ளான் போட்டுள்ளார். இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 21-ஆம் தேதி) நடிகர் கார்த்திகேயாவின் பிறந்த நாள் என்பதால் அஜித் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, இது தொடர்பாக கார்த்திகேயா ட்விட்டரில் “தல அஜித் சாரின் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. கொஞ்சம் பொறுமையா இருங்க.. நீங்க எதிர்பார்த்ததை விட சிறப்பான ஒரு அப்டேட் ‘வலிமை’ பட டீமிடமிருந்து வர போகுது… தல தரிசனத்திற்காக வெயிட்டிங். என்ன நான் சொல்றது” என்று கூறியுள்ளார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.