பிக்பாஸ் நிகழ்ச்சியில் அழுத அறந்தாங்கி நிஷாவிர்க்கு சப்போர்ட் செய்த வனிதா!
October 8, 2020 / 12:38 PM IST
|Follow Us
சமீப காலமாக இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி வனிதா விஜயகுமாரின் திருமணம் மற்றும் அதன் தொடர்பான விமர்சனங்களும் ஆகும்.
இதற்கு பலவாறு தன் பதிலடிகளை கொடுத்து வந்த வனிதா அவ்வப்போது சில பிரபலங்கள் குறித்தும் தன் கருத்துக்களைப் பேசி தன்னுடைய பாலோவர்ஸ் எண்ணிக்கையை அதிகரித்து வந்தார்.
வனிதா பிரச்சனை இணையதளத்தில் பரவ ஆரம்பித்தது முதல் அவருக்கு ஒரு செலிபிரிட்டி லுக் இணையதளத்தில் கிடைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி குக்கரி சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இதைத்தொடர்ந்து தற்போது தொடங்கியுள்ள பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை விமர்சனம் செய்யவும் ஒரு நிகழ்ச்சி ஒன்றை தனது யூடியூப் சேனலில் தொகுத்து வழங்க உள்ளாராம் வனிதா விஜயகுமார்.
தற்போது கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ள வனிதா விஜயகுமார் சமீபத்தில் அறந்தாங்கி நிஷா பிக்பாஸ் வீட்டில் தான் கருப்பாக இருப்பதற்கு பலரும் தன்னை கேலி செய்தது குறித்து பேசி அழுதிருந்தார். இதை ஆதரிக்கும் விதமாக வனிதா ஒரு போஸ்டை வெளியிட்டுள்ளார்.
கருப்பும் அழகுதான் கருப்பாக இருக்கும் மனிதர்களை கிண்டல் செய்வதை அனைவரும் கைவிட வேண்டும். பார்ப்பவர்கள் கண்ணில்தான் அழகு இருக்கிறது, அழகு என்பது நிறத்தில் இல்லை மனதில் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இதைப் பலரும் ஆதரித்தும் வருகிறார்கள், சிலர் கலாய்த்தும் வருகிறார்கள்.
Black is beautiful…please stop shaming women for being dark,short,big made and call them ugly…beauty is beyond that…and all the women and people out there being ashamed of ur appearance isn't right…god made us all beautiful…beauty lies in the eyes of the beholder… pic.twitter.com/mwbGdgX7kK