விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் யார்? என்ற கேள்வி அனைவரது மனதிலும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் பலரும் இவர்கள் கலந்து கொள்வார்கள் என்று அவ்வப்போது ஏதேனும் ஒரு பிரபலத்தின் பெயரை வெளியிட்டு வந்தார்கள்.
மொத்தம் 105 நாட்கள் இந்த பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியது. இதில் 16 பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, நடிகர் பாலாஜி முருகதாஸ், நடிகை சிவானி நாராயணன், செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத், பாடகர் வேல்முருகன், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, நகைச்சுவை பேச்சாளர் அறந்தாங்கி நிஷா, நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, நடிகை சமயுக்தா கார்த்திக், நடிகை ரம்யா பாண்டியன, சூப்பர் சிங்கர் ஆஜித் உள்ளிட்ட 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
சுரேஷ் சக்கரவர்த்தி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளைக் கொண்டவர் ஆவார். 1991 ஆம் வருடம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான “அழகன்” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதுமட்டுமின்றி இவர் சிறந்த சமையல் கலை நிபுணரும் ஆவார், இதற்கு இவர் ஒரு தனி யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் ருசிகர சமையல் குறிப்புகளுடன் நிறைந்திருக்கும். பன்முக திறமைகளை கொண்ட இந்த நடிகர் தற்போது பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலம் மக்களிடையே பரிட்ச்சயப்பட்டுள்ளார்.
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

