தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான காயத்ரி சங்கர், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் ரம்மி, புரியாத புதிர், சீதக்காதி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்துள்ளார்.
இவர் தற்போது இயக்குனராக உருவெடுத்து “Road to Thumbha” என்று பெயரிடப்பட்டுள்ள குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். மேலும் இந்த குறும்படத்தை அவர் இந்தியன் பிலிம் பிராஜக்ட் என்ற போட்டிக்காக இயக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த குறும்படத்திற்கு நல்ல வெற்றி கிடைத்துள்ளதாகவும் இதற்கு தன்னுடன் பணிபுரிந்த அனைத்து டெக்னீசியன்கள்தான் காரணம் என்றும் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து இவர் தற்போது “பி.செல்வி அண்ட் டாட்டர்ஸ்” என்ற குறும்படத்தை இயக்கி வருவதாகவும், இந்த குறும்படம் தாய் மற்றும் மகளுக்கு இடையே இருக்கும் உறவை அழகாக எடுத்துரைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். நடிகையாக இருந்த காயத்ரி தற்போது இயக்குனராக உருவெடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.