கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான “எனை நோக்கி பாயும் தோட்டா” என்ற படத்தின் இசையமைப்பாளர் தர்புக சிவா தற்போது இயக்குனராக உருவெடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “முதல் நீ முடிவும் நீ” படத்தின் பாடலை கௌதம் மேனன் தற்போது வெளியிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு அமித் இயக்கத்தில் வெளியான “ராஜதந்திரம்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தர்புக சிவா. இதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு பிரசாத் முருகேசன் இயக்கத்தில் வெளியான “கிடாரி” என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இதை தொடர்ந்து இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் இசையமைத்தார். நடிகராக இருந்து இசையமைப்பாளராக தன் திறமையை நிரூபித்த தர்புக சிவா தற்போது இயக்குனராக உருவெடுத்துள்ளார்.
தற்போது “முதல் நீ முடிவும் நீ” எனும் படத்தை இவர் புதுமுகங்களை வைத்து இயக்கி வருகிறார். சமீர் பரத் ராம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். தர்புக சிவா இந்த படத்தை இயக்கியது மட்டுமில்லாமல் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்டரில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கதையை கொண்டுள்ளதாக இந்த திரைப்படம் அமையும் என்று தெரிகிறது.
தற்போது இந்த படத்தின் “காற்றிலே” என்ற பாடலை கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.