“ஷிவானியை அவரது அம்மா திட்டியதால் Guilty-ஆ இருக்கு”… கதறி அழுத பாலாஜி!
December 29, 2020 / 06:10 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா மற்றும் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனிதா சம்பத் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரம்யா பாண்டியன் “basically நிறைய ரியாக்ஷன்ஸ் வெளியே வந்திருக்கும்னு நினைக்கிறேன். உங்களை எதுவுமே சொல்லல. அவங்களதான் சொன்னாங்க. individual-ஆ நீ ஏன் ஒரு opinion-வும் எடுத்து வைக்கல.
comfort zone-ல இருக்கணும்னா நீ வீட்ல இருக்கணும் அப்படின்னு சொன்னாங்க” என்று சொல்கிறார். அதன் பிறகு பாலாஜி முருகதாஸ், ஆஜித் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாலாஜி முருகதாஸ் “அவங்க அம்மா வந்து அப்படி பண்ணல, இப்படி பண்ணலன்னு அவளை குறை சொல்லும்போது, அதுல நான் சம்பந்தப்பட்டிருக்கேன் அது என்னாலதான்னு நினைக்கும்போது ரொம்ப guilty-ஆ இருக்கு. எதுவுமே வந்து அவங்க திட்டிட்டு என்ன கேட்காம போனது. ஒரு மாதிரி ரொம்ப guilty-ஆ இருக்கு” என்று அழுது கொண்டே சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.