• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “ரசிகர்களின் செயல்கள் என்னை வறுத்தமுற செய்கிறது”… ‘வலிமை’ தொடர்பாக அஜித் வெளியிட்ட அறிக்கை!

“ரசிகர்களின் செயல்கள் என்னை வறுத்தமுற செய்கிறது”… ‘வலிமை’ தொடர்பாக அஜித் வெளியிட்ட அறிக்கை!

  • February 15, 2021 / 07:51 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“ரசிகர்களின் செயல்கள் என்னை வறுத்தமுற செய்கிறது”… ‘வலிமை’ தொடர்பாக அஜித் வெளியிட்ட அறிக்கை!

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.

இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

அஜித்தின் ரசிகர்கள் பல மாதங்களாக ‘வலிமை’ படத்தின் அப்டேட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 14-ஆம் தேதி) சென்னைக்கு வந்த பிரதமர் மோடி காரில் சென்று கொண்டிருக்கும் போது வழியில் அஜித் ரசிகர்கள் “ஐயா வலிமை அப்டேட் கொடுங்க” என்று கேட்டதுடன் கையில் ஒரு போர்டும் வைத்திருந்தனர். இந்த சம்பவம் நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் ட்விட்டரில் “வலிமை ஃபர்ஸ்ட் லுக் விரைவில் ரிலீஸாகும்” என்று கூறினார். தற்போது, இது தொடர்பாக நடிகர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில் “என் மீதும் என் படங்களின் மீதும் அபரிதமான அன்பு கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம். கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் ‘வலிமை’ சம்பந்தப்பட்ட updates கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வறுத்தமுற செய்கிறது.

முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும். இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன். நன்றி” என்று கூறியுள்ளார்.

pic.twitter.com/b9mZ6mUglE

— Suresh Chandra (@SureshChandraa) February 15, 2021

Wanakam. Humbled by your love towards our film “Valimai”. Bear with us as we work on presenting the First look soon. It’s in the best interests of the film. #Valimai #ValimaiUpdate #AjithKumar

— Boney Kapoor (@BoneyKapoor) February 15, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Ajith
  • #press
  • #Valimai

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

AK63 :  ‘AK63’ல் அஜித்துக்கு எதிராக மோதப்போகும் 2 வில்லன்கள் யார் தெரியுமா?

AK63 : ‘AK63’ல் அஜித்துக்கு எதிராக மோதப்போகும் 2 வில்லன்கள் யார் தெரியுமா?

Vidaamuyarchi : முடிவடைந்தது அஜித்தின் ‘விடாமுயற்சி’ அஜர்பைஜான் ஷெட்யூல்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Vidaamuyarchi : முடிவடைந்தது அஜித்தின் ‘விடாமுயற்சி’ அஜர்பைஜான் ஷெட்யூல்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Ajith, Shalini : அஜித் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்!

Ajith, Shalini : அஜித் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்!

AK63 : ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘AK63’ ஷூட்டிங்… மீண்டும் அஜித்துக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

AK63 : ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘AK63’ ஷூட்டிங்… மீண்டும் அஜித்துக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

AK63 : அஜித்தின் 63-வது படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… இதற்கு இசை யார் தெரியுமா?

AK63 : அஜித்தின் 63-வது படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… இதற்கு இசை யார் தெரியுமா?

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’ல் முக்கிய ரோலில் நடிக்கும் அஜித் பட நடிகை!

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’ல் முக்கிய ரோலில் நடிக்கும் அஜித் பட நடிகை!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version