சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ்வும் சேர்ந்து நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கான ஷூட்டிங் கடந்த மார்ச் 10-ஆம் தேதி முதல் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான சிம்ரன் நடிக்கிறார். மேலும், முக்கிய ரோலில் பாபி சிம்ஹா நடிக்கிறார்.
தற்போது, இந்த படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடிக்க ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் ஃபேமஸான வாணி போஜன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
@vanibhojanoffl joins the gang #Chiyaan60
Welcome to the team
pic.twitter.com/DEG82znLir
— karthik subbaraj (@karthiksubbaraj) March 13, 2021