‘மாஸ்டர்’ இயக்குநரின் பிறந்த நாளுக்கு டாப் இயக்குநர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்… வைரலாகும் ஸ்டில்ஸ்!
March 17, 2021 / 12:07 PM IST
|Follow Us
2016-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆந்தாலஜி படம் ‘அவியல்’. இதில் ‘களம்’ என்ற கதையை மட்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அதன் பிறகு லோகேஷ் இயக்கிய படம் ‘மாநகரம்’. ஹைப்பர் லிங்க் படமான இதில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கசாண்ட்ரா, சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர் ஹிட்டானதும், லோகேஷுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தினை இயக்கினார்.
ஆக்ஷன் த்ரில்லர் படமான இது 2019-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. இப்படம் ரிலீஸாவதற்கு முன்பே, விஜய்க்கு கதை சொல்லி ‘மாஸ்டர்’ படத்துக்கான வேலைகளை துவங்கி விட்டார். இந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ‘மாஸ்டர்’ ரிலீஸானது. இந்த படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது கமலை வைத்து இயக்கும் ‘விக்ரம்’ படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக பணியாற்றி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இப்பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சர்ப்ரைஸாக தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், கெளதம் மேனன், லிங்குசாமி, சசி, வசந்த பாலன் ஆகியோர் கலந்து கொண்டனராம்.