“என் சுவர் என் உரிமை”… கட்சிக்காரர்களால் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பேசிய கே.எஸ்.ரவிக்குமார்!
March 26, 2021 / 03:29 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் – ‘உலக நாயகன்’ கமல் ஹாசனை வைத்து ‘தசாவதாரம், படையப்பா, அவ்வை சண்முகி, முத்து’ போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். விரைவில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் தமிழ் ரீமேக்கை, கமல் ஹாசனை வைத்து இயக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது.
இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் கோலிவுட்டில் வலம் வரும் கே.எஸ்.ரவிக்குமாரின் நடிப்பில் இப்போது ‘கோப்ரா, மாளிகை, கூகுள் குட்டப்பன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நேற்று கே.எஸ்.ரவிக்குமார் இன்ஸ்டாகிராமில் “ஒரு முக்கிய அறிவிப்பு” என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ள வீடியோவில் “வணக்கம். நானும் உங்கள மாதிரி ஒரு சாதாரண இந்திய குடிமகன் தான். ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு இருக்கும். அது மாதிரி எனக்கும் ஒரு கனவு இருந்தது. சொந்தத்துல ஒரு வீடு கட்டணும் அப்படின்னு. பல வருஷம் கஷ்டப்பட்டு retired-ஆகுற stage-ல ஒரு வீடு, அழகான வீடு கட்டினேன்.
அதுல சந்தோஷமா இருக்கலாம்னு நினைக்கும்போது ஒரு பிரச்சனை. நம்ம என்ன கோழையா? அது எப்படி silent-ஆ இருப்போம். அதுக்காக எதிர்த்து கேட்டா, பிரச்சனை ரொம்ப பெருசாயிடுச்சு. என்ன பண்றதுன்னே புரியலங்க. அதுனால தான் உங்ககிட்ட பேசுறேன். மறுபடியும் நம்ம பேசுவோம். அப்ப உங்களுக்கு புரியும். நான் என்ன சொல்ல வர்றேன்னு. அடுத்த வீடியோவுல பேசுவோம். bye” என்று கூறியிருந்தார். தற்போது, இன்று கே.எஸ்.ரவிக்குமார் இன்ஸ்டாகிராமில் “என் சுவர் என் உரிமை” என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ள வீடியோவில் “வணக்கம். நேத்து நான் போட்ட அந்த வீடியோவுக்கு இவ்ளோ பெரிய ஆதரவு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. ஆதரவு கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
மதில். நான் ஒரு சொந்த வீடு கட்டினேன்னா, அதை சுற்றி மதில் சுவர் கட்டுவேன் இல்லையா? so எனக்கு சொந்தமான அந்த மதில் சுவர்ல, என்ன கேட்காம கட்சிக்காரங்கள் எல்லாம் ஆக்கிரமிச்சா? அது எந்த விதத்துல நியாயம்? என் சுவர் என் உரிமை அப்படின்னு நான் தட்டிக்கேட்க போகும்போது தான் இந்த பிரச்சனையே ஆரம்பிச்சது. அது என்ன பிரச்சனை? எவ்ளோ பெரிய பிரச்சனை? அந்த பிரச்சனை எப்படி solve ஆச்சு அப்படிங்குறதெல்லாம் சீக்கிரமே நான் உங்களுக்கு சொல்றேன். sorry. காமிக்குறேன். நன்றி வணக்கம்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. ஆனால், உண்மையாகவே அந்த வீட்டினால் ஏதேனும் பிரச்சனையா? அல்லது இது அவரின் புதிய படத்தின் புரோமோஷனுக்கான வீடியோவா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.