அஜித்தின் ‘வலிமை’… மாஸான அப்டேட் கொடுத்த போனி கபூர்!
March 30, 2021 / 10:02 AM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.
இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற மே 1-ஆம் தேதி அஜித்தின் பர்த்டே ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இப்படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் ரைட்ஸை ‘கோபுரம் சினிமாஸ்’ மற்றும் ‘ரோமியோ பிக்சர்ஸ்’ ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து அதிக விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை போனி கபூரே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
We at Bayview Projects & Zee Studios are happy to announce that the Tamil Nadu theatrical rights of our film #Valimai have been entrusted with Raahul of Romeo pictures @mynameisraahul and @Gopuram_Cinemas
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.