பிரச்சாரத்தின் போது கோபத்தில் டார்ச்லைட்டை தூக்கி வீசிய கமல்… வைரலாகும் வீடியோ!
April 1, 2021 / 09:36 AM IST
|Follow Us
விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகப்போகிறது. வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த மார்ச் 15-ஆம் தேதி நடிகரும், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கோவை தெற்கு பகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
தற்போது, நடிகரும், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவருமான ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் புதுச்சேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அவரது மைக் வேலை செய்யாத டென்ஷனால் கையில் வைத்திருந்த டார்ச்லைட்டை கோபமாக வாகனத்திற்குள் இருந்த அவரது டீம் மீது வீசியதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது, எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. கமல் கட்சியின் சின்னமே ‘டார்ச்லைட்’ என்பது குறிப்பிடத்தக்கது.
When the mic is not working, Actor Kamal shouting and throwing his party symbol heavyweight torch light on his party worker face. pic.twitter.com/buSsLfDJV5