சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஷிவதா. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘நெடுஞ்சாலை’. இதில் ‘பிக் பாஸ்’ சீசன் 4 வின்னர் ஆரி தான் ஹீரோவாக நடித்திருந்தார். ‘சில்லுனு ஒரு காதல்’ படம் மூலம் ஃபேமஸான கிருஷ்ணா இதனை இயக்கியிருந்தார்.
‘சில்லுனு ஒரு காதல்’ படத்துக்கு பிறகு நடிகை ஷிவதாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் கலையரசனின் ‘அதே கண்கள்’, மாதவனின் ‘மாறா’ என இரண்டு தமிழ் படங்கள் குவிந்தது. இதில் ‘அதே கண்கள்’ படம் ஷிவதாவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தில் ஷிவதா பவர்ஃபுல்லான வில்லி ரோலில் நடித்து மிரட்டியிருந்தார்.
ஷிவதா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாள மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, ஷிவதா நடிப்பில் தமிழில் ‘வல்லவனுக்கும் வல்லவன், கட்டம், இறவாக்காலம்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 23-ஆம் தேதி) நடிகை ஷிவதாவுக்கு பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை ஷிவதாவின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

