சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. பூஜா ஹெக்டேவுக்கு முதல் பட வாய்ப்பு அமைந்தே தமிழ் சினிமாவில் தான். அது தான் ‘முகமூடி’. இந்த படம் ஹிட் ஆகாமல் போனதால் பூஜா ஹெக்டேவின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் எதுவும் இணையவில்லை. ஆனால், பூஜா ஹெக்டேவுக்கு படங்களை அடுத்தடுத்து கொடுத்து அவரை ஹீரோயினாக வலம் வர வைத்து அழகு பார்த்தது ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமா.
இப்படி அடித்த ஜாக்பாட்டில் தெலுங்கில் ‘ஒக்க லைலா கோஷம், முகுந்தா, துவ்வாட ஜெகன்னாதம், சாக்ஷ்யம், அரவிந்த சமீதா வீர ராகவா, மகர்ஷி, கட்டாலகொண்டா கணேஷ், அல வைகுந்தபுரமுலோ’ மற்றும் ஹிந்தியில் ‘மொகெஞ்ச தாரோ, ஹவுஸ்ஃபுல் 4’ என படங்கள் குவிந்தது. இப்போது பூஜா ஹெக்டே நடிப்பில் ‘ராதே ஷ்யாம்’ (தமிழ்/தெலுங்கு/ ஹிந்தி / மலையாளம்), ‘மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர்’ (தெலுங்கு), ‘ஆச்சார்யா’ (தெலுங்கு), ‘விஜய் 65 படம்’ (தமிழ்), ‘சர்கஸ்’ (ஹிந்தி) என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
சமீபத்தில், நடிகை பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். யாரெல்லாம் கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தீர்களோ, நீங்களும் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், இன்று ‘கொரோனா’ டெஸ்ட் எடுத்தபோது நெகட்டிவ் என்று வந்துள்ளதாக பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.
Thank you for all the love ya’ll have sent my way. I have recovered well, kicked stupid corona’s butt and finally tested NEGATIVE! 😃 yeyy! All your wishes and healing energy seemed to have done it’s magic. Forever grateful ❤️ Stay safe out there 😷🤗 pic.twitter.com/6odhfanIax