“எவ்ளோனாலும் தர்றேன்”… படுக்கைக்கு அழைத்த நபர்.. உண்மையை போட்டுடைத்த ‘மாஸ்டர்’ நடிகை!
May 15, 2021 / 06:05 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சௌந்தர்யா நந்தகுமார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலம் தான் இவர் ஃபேமஸானார். அதன் பிறகு ஷாமின் ‘6 மெழுகுவர்த்திகள்’ மற்றும் சசிக்குமாரின் ‘கொடிவீரன்’ ஆகிய இரண்டு படங்களிலும் பாடல் பாடி ஒரு பாடகியாக லைக்ஸ் குவித்தார்.
பாடகியாக வலம் வந்த சௌந்தர்யா நந்தகுமார் வெள்ளித்திரையில் நடிகையாகவும் களமிறங்கினார். அவர் அறிமுகமான முதல் படத்திலேயே ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தான் ஹீரோ. அது தான் ‘கபாலி’. ‘கபாலி’ படத்துக்கு பிறகு நடிகை சௌந்தர்யா நந்தகுமாருக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தளபதி’ விஜய்யின் ‘மாஸ்டர்’, ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘வணக்கம்டா மாப்ள’ என இரண்டு தமிழ் படங்கள் குவிந்தது. சௌந்தர்யா திரைப்படங்கள் மட்டுமில்லாமல் பல குறும்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
தற்போது, பாடகியும், நடிகையுமான சௌந்தர்யா நந்தகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். அந்த ஸ்டில்லில் ஒரு நபர் “எவ்ளோனாலும் தர்றேன். உன்கூட படுக்கணும்” என்று சௌந்தர்யாவுக்கு மெசேஜ் மூலம் படுக்கைக்கு அழைத்துள்ளார். இதனையடுத்து இந்த நபரை தான் பிளாக் செய்து விட்டேன் என்றும் சௌந்தர்யா குறிப்பிட்டுள்ளார்.