பிரபல நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், ‘கீதாஞ்சலி’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். தமிழில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமான படம் ‘இது என்ன மாயம்’ தான் என்றாலும், அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய இரண்டு படங்களும் தான்.
அதன் பிறகு கீர்த்தி சுரேஷுக்கு அடித்தது ஜாக்பாட். அவரின் கால்ஷீட் டைரியில் ‘பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார், பெண்குயின் ‘ என படங்கள் குவிந்தது. கீர்த்தி சுரேஷ் நேரடி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘அண்ணாத்த, மரக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம், குட் லக் சகி, சாணிக் காயிதம், சர்காரு வாரி பாட்டா, வாஷி’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், பிரபல ஸ்பானிஷ் சீரிஸான ‘மணி ஹெய்ஸ்ட்’-யின் தீம் பாடலை கிட்டாரில் வாசிப்பது போன்ற ஒரு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.