‘பிக் பாஸ் 5’ முதல் நாமினேஷன் பிராஸஸ்… இந்த 2 போட்டியாளர்களின் பெயரை தான் பலரும் சொல்றாங்க!
October 11, 2021 / 10:46 AM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.
தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம். பின், இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பவானி ரெட்டி, சின்னப்பொண்ணு, நதியா சாங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறி விட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ‘பிக் பாஸ்’ குரலில் “இந்த பிக் பாஸ் சீசன் ஐந்தோட முதல் நாமினேஷன் பிராஸஸ். இந்த வீட்ல எல்லாருமே நல்லவங்கதான்னு நீங்க நல்லவங்க வேஷம் போடாம இருந்தீங்கன்னா நல்லா இருக்கும்” என்று ஒலிக்கிறது. பல போட்டியாளர்கள் இசை வாணியின் பெயரையும், அபிநய்யின் பெயரையும் குறிப்பிடுகிறார்கள். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.