“சரத் பாபுவுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாரா நமீதா?”… உண்மையை போட்டுடைத்த அவரது கணவர் வீரேந்திர சவுத்ரி!
January 28, 2022 / 05:19 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நமீதா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘எங்கள் அண்ணா’. இதில் ஹீரோவாக விஜயகாந்த் நடிக்க, படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சித்திக் இயக்கியிருந்தார். ‘எங்கள் அண்ணா’ படத்திற்கு பிறகு நடிகை நமீதாவிற்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மகா நடிகன், ஏய், இங்கிலீஷ்காரன், சாணக்யா, பம்பரக்கண்ணாலே, ஆணை, கோவை பிரதர்ஸ், பச்சக் குதிர, தகப்பன்சாமி, நீ வேணுன்டா செல்லம், வியாபாரி, நான் அவன் இல்லை, அழகிய தமிழ்மகன், பில்லா, சண்டை, பாண்டி, பெருமாள், தீ, 1977, இந்திர விழா, ஜகன் மோகினி, அழகான பொண்ணுதான், இளைஞன், இளமை ஊஞ்சல், பொட்டு’ என படங்கள் குவிந்தது.
மேலும், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். நமீதா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 2017-ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நமீதா.
ஆனால், வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்வதற்கு முன்பு பிரபல நடிகர் சரத் பாபுவை தான் நமீதா காதலித்து வருவதாகவும், அவருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் மிக விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. தற்போது, நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி இது தொடர்பாக மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “எப்படி இந்த மாதிரி ஒரு வதந்தி பரவுச்சுன்னு தெரியல. நடிகர் சரத் பாபுவுக்கு இந்த தவறான செய்தி கண்டிப்பாக மன வருத்தத்தை கொடுத்திருக்கும். நமீதாவும், சரத் பாபுவும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக ஒரு பொய்யான தகவலை மீடியாவில் ஈஸியாக சொல்லி விட்டார்கள். ஆனால், நானும், நமீதாவும் இந்த வதந்தியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார்.