300 ரூபிக்ஸ் க்யூப்கள்… ரஜினிக்காக அந்த விஷயத்தை செய்து அசத்திய 9-ஆம் வகுப்பு மாணவன்!
April 21, 2021 / 09:23 PM IST
|Follow Us
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி எந்த இயக்குநருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் தான் ரஜினி நடிக்கப்போகிறார் என்று உறுதிசெய்யப்பட்டது. இந்த படத்தை தயாரிப்பது ‘சன் பிக்சர்ஸ்’ என்பதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரஜினியின் ‘முத்து’ பட வசனம் போல் எப்போ வரும்னு சொல்லாம, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்தது.
படத்தின் டைட்டிலே ‘அண்ணாத்த’ என்று திடீரென அறிவித்து விட்டார்கள். மேலும், படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடிக்கிறது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில், இப்படத்தை இந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனமே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி இந்த படத்தின் அடுத்த ஷெடியூல் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் ஹைதராபாத்துக்கு சென்றார். இந்நிலையில், கொச்சியை சேர்ந்த அத்வைத் என்ற 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒரு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த வீடியோவில் அத்வைத் 300 ரூபிக்ஸ் க்யூப்களை வைத்து ரஜினிகாந்தின் முகத்தை வடிவமைத்து அசத்தியுள்ளார்.
@rajinikanth Sir, I am Advaidh Manazhy studying in 9th standard of Bhavans Adarsha Vidyalaya Kakkanad Kochi from Kerala. I love solving cubes. I like making portraits with cubes. Today, I tried making this portrait using 300 cubes. Hope you would liked the portrait! pic.twitter.com/WAI2nWrQTp