ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?
January 28, 2023 / 07:40 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் அறிவழகன். இவரது படங்களுக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக ‘பாய்ஸ், அந்நியன்’ போன்ற படங்களில் பணியாற்றிய அறிவழகன் இயக்குநராக களமிறங்கிய முதல் படம் ‘ஈரம்’.
இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர் ஆதி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சிந்து மேனன் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சரண்யா மோகன், நந்தா, ஸ்ரீநாத், கிருஷ்ணா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதற்கு தமன் இசையமைத்திருந்தார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.16.75 கோடியாம்.