‘பிக் பாஸ் 4’ : “என்ன ஆகணும்னு அதை போடுறீங்க”… ஷிவானியிடம் அந்த கேள்வியை கேட்ட ஆரி!
October 6, 2020 / 01:09 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.
தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். நேற்றைய பிக் பாஸில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் நான்கு போட்டியாளர்களை செலக்ட் செய்து, அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு ஹார்ட்டும், பிடிக்காதவர்களுக்கு ஹார்ட் பிரேக்கும் கையில் பதிக்க வேண்டும் என்ற டாஸ்க். இதில் அதிக ஹார்ட் பிரேக்குகளை நடிகை ஷிவானி நாராயணன் பெற்றார்.
தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் நடிகை ஷிவானி நாராயணனுக்கு மாடல் சோமசேகரும், மாடல் பாலாஜி முருகதாஸும் ஆறுதல் சொல்லி வருகின்றனர். மேலும், நடிகர் ஆரி “நீங்க தினமும் ஒரு வீடியோ இன்ஸ்டாவில் போடுறீங்க.. அதை பார்ப்பதற்கு ஒரு பெரிய ஃபேன்ஸ் இருக்காங்க… என்ன ஆகணும்ங்கறதுக்காக அதை போடுறீங்க?” என்று ஷிவானியிடம் கேள்வி கேட்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.