சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் சேர்ந்திருக்கும் புது நடிகர்!
July 25, 2020 / 05:10 PM IST
|Follow Us
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “அண்ணாத்த”. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு சுந்தர், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஸ், சூரி, வேல ராமமூர்த்தி ஆகியோர் ஏற்கனவே நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் புதிதாக நடிகர் அர்ஜெய் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகர் அர்ஜெய் ஏற்கனவே பாயும் புலி, தெறி, சண்டக்கோழி 2 மற்றும் தேவி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் சேர்ந்தது பற்றி நடிகர் அர்ஜெய் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதைப்பற்றி அவர் “என்னுடைய பிறப்பிடமான பழனியில் நான் வியந்து பார்த்த இரண்டு விஷயங்கள் முருகன் மற்றும் ருத்ராக்ஷம். பழனி என்றால் முருகன் தான், ஆனால் ருத்ராட்சம் அணிந்த பெரும்பாலோரின் ஈர்ப்பு #சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அப்படிப்பட்ட மனிதரை நான் சினிமாவில் நுழைந்த முதல் நாளில் இருந்து பார்க்க முடியாத தூரத்தில் இருந்து பார்த்து மகிழ்ந்தேன். அந்த மாபெரும் மனிதருடன் சேர்ந்து நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்தது முருகன் தான்” என்று உணர்ச்சி வசமாக தனக்கு “அண்ணாத்த” படத்தில் நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை பற்றி பதிவிட்டுள்ளார் நடிகர் அர்ஜெய்.
“அண்ணாத்த” படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவில் இந்த படத்தின் காட்சிகளை ரூபன் எடிட்டிங் செய்கிறார். லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.