அடேங்கப்பா… நடிகர் அருள்நிதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘வம்சம்’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாண்டிராஜ் இதனை இயக்கியிருந்தார். இதில் அருள்நிதிக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார்.

‘வம்சம்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் அருள்நிதிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘உதயன், மௌன குரு, தகராறு, ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், டிமான்ட்டி காலனி, நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும், ஆறாது சினம், பிருந்தாவனம், இரவுக்கு ஆயிரம் கண்கள், K-13, களத்தில் சந்திப்போம்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

இப்போது அருள்நிதி நடிப்பில் ‘டைரி, தேஜாவு’ மற்றும் ‘D ப்ளாக்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இம்மூன்று படங்களுமே த்ரில்லர் ஜானரில் உருவாகி வருகிறதாம். இந்நிலையில், நடிகர் அருள்நிதியின் சொத்து மதிப்பு ரூ.50 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.