யூடியூப் பிரபலத்தின் இயக்கத்தில் அருள்நிதி திரைப்படம்!
July 22, 2020 / 02:23 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருள்நிதி, கடைசியாக பரத் நீலகண்டன் இயக்கத்தில் “கே13” என்ற த்ரில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது அவர் சீனுராமசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும், “காலத்தில் சந்திப்போம்” என்ற படத்திலும் நடிக்கவுள்ளதாக செய்தி வந்தது. இதை தொடர்ந்து சமீபத்தில் அவர் அறிமுக இயக்குனரான இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் “டைரி” என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்று செய்தி வெளியானது.
தற்போது அருள்நிதி யூடியூப் பிரபல நடிகரான எருமசாணி விஜய் இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்ற அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனராகவிருக்கும் விஜய் ஒரு காலேஜ் தொடர்பான கதையை எழுதியுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த படத்தில் கல்லூரி மாணவனாக நடிப்பதற்காக அருள்நிதி 15 கிலோ எடையை குறைத்துள்ளாராம். அதுமட்டுமின்றி இந்த படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் முதல்முறையாக தயாரிக்கவுள்ளாராம். இவர் ஏற்கனவே அருள்நிதியின் டிமான்ட்டி காலனி, கே13 படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்திற்கு ரான் இதன் யோகன் இசையமைக்க உள்ளாராம்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.