தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் கருணாஸ். 2001-ஆம் ஆண்டு வெளியான படம் ‘நந்தா’. கதையின் நாயகனாக சூர்யா நடித்திருந்த இந்த படத்தில் அவரின் நண்பனாக நடித்திருந்தார் கருணாஸ். இது தான் கருணாஸ் அறிமுகமான முதல் படமாம்.
‘நந்தா’ படத்துக்கு பிறகு ‘பாபா, வில்லன், திருடா திருடி, பிதாமகன், திருமலை, வசூல் ராஜா MBBS, அட்டகாசம், திருவிளையாடல் ஆரம்பம்’ போன்ற பல படங்களில் நடித்தார். மேலும், ‘திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சந்தமாமா, ரகளபுரம்’ ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்தார் கருணாஸ். தற்போது, கருணாஸ் கைவசம் ‘சூரரைப் போற்று’ என்ற ஒரு படம் மட்டும் உள்ளது. இதில் ஹீரோவாக சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் கருணாஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டாராம். நடிகர் கருணாஸ், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பது குறிப்பிடத்தக்கது.