நடிகர் மாதவனுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!
March 25, 2021 / 05:39 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் மாதவன். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானதுடன் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொடுத்தது. அந்த படம் தான் ‘அலைபாயுதே’. அதன் இயக்குநர் மணிரத்னம். ‘அலைபாயுதே’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் மாதவனுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் குவிந்தது. மாதவன் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, மாதவன் ஹீரோவாக நடித்து, தயாரித்து, இயக்கி கொண்டிருக்கும் படம் ‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்’.
ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆறு மொழிகளில் உருவாகி கொண்டிருக்கும் இந்த படத்துக்கான இறுதிக்கட்ட வேலைகள் முடிவடையும் தருவாயில் இருக்கிறதாம். இந்நிலையில், நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகர் மாதவனின் ரசிகர்கள் ஷாக் மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.
Farhan HAS to follow Rancho and Virus has always been after us BUT this time he bloody caught up. 😡😡😄😄BUT-ALL IS WELL and the Covid🦠 will be in the Well soon. Though this is one place we don’t want Raju in😆😆. Thank you for all the love ❤️❤️I am recuperating well.🙏🙏🙏 pic.twitter.com/xRWAeiPxP4