இதுவரை யாரும் பார்த்திராத ரஜினிகாந்தின் அரிய புகைப்பட தொகுப்பு!
October 29, 2020 / 02:55 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். அறிமுகமான முதல் தமிழ் படமே கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் அமைந்தது. அது தான் ‘அபூர்வ ராகங்கள்’. அதன் பிறகு ‘மூன்று முடிச்சு, அவர்கள், 16 வயதினிலே, காயத்ரி, பைரவி, முள்ளும் மலரும், ப்ரியா, நினைத்தாலே இனிக்கும்’ என நடித்த எல்லா படங்களிலும் ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் ரஜினி.
100-வது படமாக ‘ஸ்ரீ ராகவேந்திரர்’, 125-வது படமாக ‘சிவா’வும் ரஜினிக்கு அமைந்தது. ரஜினி தமிழ் மட்டுமில்லாமல், ஹிந்தி, தெலுங்கு, பெங்காலி, ஆங்கிலம், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து மாஸ் காட்டியிருக்கிறார். 1981-ஆம் ஆண்டு லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரஜினிகாந்த். இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி எந்த இயக்குநருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் தான் ரஜினி நடிக்கப்போகிறார் என்று உறுதிசெய்யப்பட்டது.
இந்த படத்தை தயாரிப்பது ‘சன் பிக்சர்ஸ்’ என்பதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரஜினியின் ‘முத்து’ பட வசனம் போல் எப்போ வரும்னு சொல்லாம, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்தது. படத்தின் டைட்டிலே ‘அண்ணாத்த’ என்று திடீரென அறிவித்து விட்டார்கள். மேலும், படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடிக்கிறது. இதன் புதிய ஷெடியூல் ஷூட்டிங் வருகிற நவம்பர் மாதம் சென்னையில் ஆரம்பமாகவுள்ளது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் ரஜினிகாந்தின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.