ராணாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டதற்கு இதுதான் காரணம்!
June 12, 2020 / 07:09 PM IST
|Follow Us
தென்னிந்தியாவின் பிரபல நடிகரான ராணா மற்றும் மிஹிகா திருமணம், தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரபல திரைப்பட நடிகரான ராணா தமிழில் ‘பாகுபலி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானார். இவர் கடந்த மே மாதம் மிஹிகா பஜாஜை திருமணம் செய்ய விருப்பதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து இந்த பிரபல ஜோடியின், ரோகா திருமண சடங்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ சமீபத்தில் நடந்தேறியது. இதன் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வந்தது.
இந்த ஜோடி அவர்களது திருமணம் வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடக்கும் என்று வெளியிட்டிருந்தார்கள். ஆனால் ஐதராபாத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிக அளவில் இருப்பதால் இந்த ஜோடியின் திருமணம் ஒத்திவைத்துள்ளதாக செய்தி தற்போது பரவி வருகிறது.
இவர்களைப் போலவே சில நாட்களுக்கு முன்பு, தெலுங்குப் பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் நிதின் தனது திருமண தேதியை கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளி வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து ராணா டகுபதி மிஹிகா பஜாஜ் திருமணமும் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது என்ற செய்தி தற்போது வைரலாகி வருகிறது.