பிரபல நடிகர் விக்ரமுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘மகான்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், விக்ரம் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்க உள்ளாராம். நடிகர் விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுதானாம்.

இந்த படம் நடிகர் விக்ரமின் கேரியரில் 61-வது படமாம். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளாராம். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில், நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறாராம்.

 

Share.