அடேங்கப்பா… நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘மகான்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘மகான்’ படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ்வும் சேர்ந்து நடித்துள்ளனர். இதில் விக்ரமுக்கு ஜோடியாக பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான சிம்ரன் நடித்துள்ளார். இன்னொரு ஹீரோயினாக வாணி போஜன் நடித்துள்ளார். இப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’-யின் முதல் பாகம் அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் ரிலீஸாகுமாம். இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் ‘கோப்ரா’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு ரூ.150 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.