லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்க ஓகே… ஆனாலும், ஒரு கண்டிஷன் போட்ட நடிகை!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த நடிகை. இவர் அறிமுகமான முதல் ரொமான்டிக் படத்தை 64 வயதான டாப் இயக்குநர் தான் இயக்கியிருந்தார். இப்படத்தில் நம்ம பருத்திவீரன் தான் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பிறகு அதே டாப் இயக்குநர் இயக்கிய இன்னொரு படத்திலும் அந்த நடிகை நடித்திருந்தார்.

அந்த நடிகை தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, மராத்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, அந்த நடிகை நடிப்பில் இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், லிப் லாக் முத்தம் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடிக்கலாம் என்று அந்த நடிகை முடிவு எடுத்துள்ளாராம்.

ஆனால், அப்படிப்பட்ட காட்சிகள் அப்படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே ஓகே சொல்வாராம், தேவையில்லாமல் கவர்ச்சிக்காக மட்டும் சேர்க்கப்பட்டால் நடிகை நோ சொல்லி விடுவாராம். தனது கால்ஷீட் டைரியில் அதிக படங்கள் குவிய வேண்டும் என்பதற்காக தான் நடிகை இந்த ப்ளான் போட்டிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Share.