இதுவரை யாரும் பார்த்திராத ஐஸ்வர்யா ராயின் அரிய புகைப்பட தொகுப்பு!
November 2, 2021 / 09:30 AM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். இவருக்கு அமைந்த முதல் தமிழ் படமே டாப் இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் தான் அமைந்தது. அந்த படம் தான் ‘இருவர்’. இதில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் தான் கதையின் நாயகனாக நடித்திருந்தார்.
‘இருவர்’ படத்துக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன்’ என தமிழ் படங்கள் குவிந்தது. ஐஸ்வர்யா ராய் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, ஆங்கிலம், பெங்காலி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
2007-ஆம் ஆண்டு ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்-க்கும் திருமணம் நடைபெற்றது, அபிஷேக் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இப்போது ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட படைப்பான ‘பொன்னியின் செல்வன்’-யில் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று (நவம்பர் 1-ஆம் தேதி) நடிகை ஐஸ்வர்யா ராயின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை ஐஸ்வர்யா ராயின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.