அடேங்கப்பா… நடிகை எமி ஜாக்சனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் எமி ஜாக்சன். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘மதராசபட்டினம்’. ஆர்யா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார்.

‘மதராசபட்டினம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை எமி ஜாக்சனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி, 2.0’ என தமிழ் படங்கள் குவிந்தது. எமி ஜாக்சன் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் எமி ஜாக்சன். ஜார்ஜ் பனயிட்டோ – எமி ஜாக்சன் தம்பதியினருக்கு ஆண்ட்ரியாஸ் என்ற மகன் இருக்கிறார். சமீபத்தில், இன்ஸ்டாகிராமில் கணவரின் பெயரை எமி ஜாக்சன் நீக்கியதால் இருவரும் பிரிந்து விட்டதாக சொல்லப்பட்டது. தற்போது, பிரபல பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்கை எமி ஜாக்சன் காதலித்து வருவதாகவும், அவருடன் டேட்டிங் சென்று வருவதாகவும் தண்டோரா போடப்படுகிறது. இந்நிலையில், நடிகை எமி ஜாக்சனின் சொத்து மதிப்பு ரூ.37 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.