நம்ம அதுல்யா ரவியா இது?… செம ஸ்டைலிஷ் லுக்கில் புதிய போட்டோஷூட்!
April 12, 2021 / 11:22 AM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் அதுல்யா ரவி. முதல் படமே அதுல்யா ரவிக்கு அதிக லைக்ஸ் போட வைத்தது. அது தான் ‘காதல் கண் கட்டுதே’. இந்த படத்தை ஷிவராஜ் இயக்க, ஹீரோவாக கேஜி நடித்திருந்தார். ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை அதுல்யா ரவிக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஏமாலி, நாகேஷ் திரையரங்கம், சுட்டுப் பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, என் பெயர் ஆனந்தன்’ என படங்கள் குவிந்தது. அதுல்யா ரவி சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இப்போது நடிகை அதுல்யா ரவி நடிப்பில் ‘வட்டம், முருங்கைகாய் சிப்ஸ்’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸை பார்த்த ரசிகர்கள், நம்ம அதுல்யா ரவியா இது? என ஆச்சர்யப்படுகின்றனர். அந்த அளவுக்கு செம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கிறார் அதுல்யா ரவி.