எஸ்கேப்பாக பார்த்த தயாரிப்பாளர்… பட வாய்ப்புக்காக நடிகை எடுத்த முடிவு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் அந்த ‘அ’ நடிகை. ஆரம்பத்தில் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்த அந்த நடிகைக்கு, தமிழில் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அந்த படத்துக்கு பிறகு நடிகைக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. அதன் பிறகு அவரது சித்தியால் பல சிக்கலில் சிக்கி தவித்து பின் மீண்டு வந்தார். ஆனாலும், அவர் நடிப்புக்கு தீனி போடும் வகையில் எந்த படமும் அவருக்கு அமையவில்லை.

இப்போது அந்த நடிகையின் நடிப்பில் இரண்டு தெலுங்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ஒரு தமிழ் படத்துக்காக பிரபல தயாரிப்பாளர் அந்த நடிகையை அணுகியிருக்கிறார். நடிகையோ அதிக சம்பளம் கேட்க, தயாரிப்பாளர் ஓடத் தயாராகி விட்டார். பின், சுதாரித்து கொண்ட நடிகை, தமிழில் பட வாய்ப்பு தான் முக்கியம், சம்பளம் அல்ல என்று புரிந்துகொண்டு ஏற்கனவே சொன்னதில் பாதி சம்பளம் கொடுத்தால் போதும் நான் நடிக்கிறேன் என்று தயாரிப்பாளரிடம் சொல்லி விட்டாராம்.

Share.