நடிகை இனியா விரைவில் சின்னத்திரையில் நடிக்க போகிறார்!

தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான “பாடகசாலை” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை இனியா.

ஏற்கனவே மலையாள திரையுலகில் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்திருந்த இனியா தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பாடகசாலை திரைப்படத்தை தொடர்ந்து யுத்தம் செய், வாகைசூடவா, மௌனகுரு, அம்மாவின் கைபேசி, சென்னையில் ஒரு நாள், மாசாணி போன்ற திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடைசியாக வடிவுடையான் இயக்கத்தில் வெளியான பொட்டு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது “காபி” என்ற தமிழ் படத்திலும் அதுமட்டுமின்றி ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது வரும் இனியா தற்போது ஒரு சின்னத்திரை சீரியலில் நடிக்கப் போவதாக செய்தி வந்துள்ளது.

பிரபல சேனலில் வரும் “கண்ணான கண்ணே” என்ற சீரியலில் விரைவில் இவர் நடிக்க போவதாகவும் தற்போது படவாய்ப்புகள் குறைந்து வருவதால் சீரியல் பக்கம் வந்துவிட்டதாகவும் தகவல் வந்துள்ளது.

Share.