ஒரே ஒரு போன்கால்… ஆன்லைன் மோசடியில் ரூ.1 லட்சத்தை இழந்த நடிகை நக்மா!
March 10, 2023 / 04:46 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நக்மா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘காதலன்’. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்த இந்த படத்தில் பிரபு தேவா ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை நக்மாவிற்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பாட்ஷா, ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, பெரிய தம்பி, அரவிந்தன், ஜானகிராமன், பிஸ்தா, சிட்டிசன்’ என தமிழ் படங்கள் குவிந்தது. ‘சிட்டிசன்’ தான் நக்மா நடித்த கடைசி தமிழ் படம். டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தல’ அஜித் இந்த படத்தில் நடித்திருந்தார்.
நக்மா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி போஜ்புரி, மராத்தி, ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 48 வயதான நக்மா இதுவரை திருணம் செய்து கொள்ளவில்லை.
இந்நிலையில், நடிகை நக்மா மும்பை சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் ஒன்று கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் கொடுத்த புகாரில் “தனக்கு செல்போனில் வந்த ஒரு மெசேஜில் எனது வங்கி கணக்கின் KYC விவரங்களை அப்டேட் செய்ய வேண்டுமென்றால், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை க்ளிக் செய்யுங்கள் என்று இருந்தது.
நான் அந்த லிங்கை க்ளிக் செய்ததும் மர்ம நபர் ஒருவர் எனக்கு போன் செய்து தான் வங்கி அதிகாரி என்றும், எனது KYC விவரங்களை அப்டேட் செய்ய உதவி செய்கிறேன் என்றும் சொன்னார். அவர் என்னிடம் பேசிக்கொண்டே எனது வங்கி கணக்கில் இருந்து வேறு ஒரு வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சத்தை மாற்றி விட்டார். நான் அவரிடம் எனது வங்கி விவரங்கள் பற்றி சொல்லாமலே இந்த மோசடி நடந்தது” என்று கூறியுள்ளார்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus