பிரகதி மகாவதி பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் மற்றும் நாடகங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இவரது சோசியல் மீடியா தளத்தை பலரும் ஃபாலோ செய்து வருகின்றனர். இந்த லாக்டோன் தொடங்கியது முதல் வொர்க்கவுட்டில் இறங்கியிருக்கும் இந்த நடிகை வொர்க் அவுட் செய்வது போன்ற வீடியோ, நடன வீடியோக்களை பதிவிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் வொர்க் கோட் செய்வது போன்ற புகைப்படங்களை பதிவிட்டு ” லட்சியத்தை குறைத்துக் கொள்ளாதீர்கள், முயற்சியை அதிகரியுங்கள்” என்று ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் விதமாக குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது நடனமாடுவது போன்ற வீடியோவை வெளியிட்டு “நாம் போராடிக் கொண்டிருக்கவில்லை, ஆனால் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்று கொரோனாவால் மன அழுத்தத்தில் இருந்தாலும் அவரது வீடியோவை கண்டு ரசிகர்கள் உற்சாகம் அடையும் வகையில் பதிவுகளையும் வாசகங்களையும் வெளியிட்டு வருகிறார் பிரகதி.
https://www.instagram.com/p/CC70V0HDTdw/?igshid=6vduam30i33c
நடிகை பிரகதிக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள். இந்த வயதிலும் இவ்வளவு உற்சாகமாக இருக்கும் பிரகதி பலருக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.