முன்னாள் நடிகையும் இந்நாள் அம்மா நடிகையுமான பிரகதி போட்ட குத்தாட்டம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது… காரணம் அவர் குத்தாட்டம் போட்டது அவரின் மகனுடன்..!
பாக்யராஜின் வீட்டுல விசேஷங்க படத்தில் நாயகியாக நடித்தவர் பிரகதி, இவர் சமீபகாலமாக அம்மா கதாபாத்திரங்களிலும், அண்ணி வேடங்களிலும் நடித்து வருகிறார். மேலும் அரண்மனை கிளி மற்றும் சில தெலுங்கு சீரியல்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அது சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு அவரும் அவரது மகனும் சேர்ந்த போட்ட ஆட்டம் தான் அதற்கு காரணம். மேலே ஒரு சட்டையை இடுப்பு தெரியும்படி கட்டிக்கொண்டு, கீழே மடித்து கட்டிய வேஷ்டி போன்ற உடைகளை அணிந்து கண்டு அவர் போட்ட குத்தாட்டத்தை பார்த்து பார்வையாளர்கள் ஒரு சில நிமிடம் அதிர்ந்து போயினர்.
View this post on Instagram
Actress #Pragathi massive dance with her son!
A post shared by Filmy Focus (@filmyfocus) on
இளம்வயது மகனுக்கு ஈடுகொடுத்து அவர் ஆடி ஆட்டம் உண்மையில் பார்வையாளர்கள் பிரமித்து போகத்தான் வைத்தது. நடிகையின் திறமையை ஒரு தரப்பினர் புகழந்தாலும், இந்த வயதில் அதுவும் மகனுடன் இப்படி ஒரு ஆட்டம் தேவைதானா என்று மற்றொரு தரப்பினரும் கேலி செய்து வருகின்றனர்.
மேலும் அவன் இவன் படத்தில் ஆர்யாவும் அவரது தாயாரும் ஆடிய ஆட்டத்தோடு இதனை ஒப்பிட்டும் சிலர் கிண்டல் செய்து வருவதும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.