லாக்டவுன் நேரத்தில் செய்வதிறாமல் அனைவரும் தவித்து வரும் நிலையில், நடிகை ரைசா வில்சன் தனது வீட்டையே ஸ்குவாஷ் கோர்ட்டாக மாற்றி பயிற்சி எடுத்து வருகிறார்.
பிக்பாஸ் பிரபலமும், இளம் கதாநாயகியான இவர் பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக நடித்து இளசுகளின் கனவு கன்னியாக மாறினார். தற்போது டாக்டவுன் நேரத்தில் பிரபலங்கள் செய்வதறியாமல் தவித்து, வீடியோ குரூப் காலிங், டிக்டாக், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருக்கின்றனர்.
சிலர் கொரோனா உதவி என களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். இதிலிருந்து மாறுப்பட்ட நடிகை ரைசா வில்சன் தற்போது தீவிரமாக ஸ்குவாஷ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சிறு வயதிலிருந்து ஸ்குவாஷ் பயிற்சி செய்து வரும் அவர், சமீபகாலமாக போட்ட உடல் எடையை குறைக்க தீவிரமாக ஸ்குவாஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
View this post on Instagram
Created my own little squash court at home ! #stayhome
A post shared by Raiza Wilson (@raizawilson) on
இதற்காக தனது வீட்டின் ஒரு பகுதியை ஸ்குவாஷ் கோர்ட்டாக மாற்றியுள்ளார். அவர் பயிற்சி மேற்கொண்டு வரும் காட்சியை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியதை தொடர்ந்து பல ஹீரோயின்களும் தங்களின் உடலை குறைப்பது தொடர்பாக முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்.
தற்போது கைவசம் எந்த படமும் இல்லாததால் செய்வதறியாமல் தவித்து வரும் ரைசா வில்சன், நடித்தால் கதாநாயகியாக தான் நடிப்பேன் என்றும் கூறுவதாகவும் தகவல். சமீபத்தில் தனது காதலரை சமூக வலைதளம் மூலமாக அறிமுகப்படுத்திய அவர், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்வார் எனவும் கருதப்படுகிறது.