‘ஃபிலிம்ஃபேர்’ இதழுக்காக எடுக்கப்பட்ட ஹாட் போட்டோஷூட்… ஓவர் கிளாமரில் நடிகை ராஷ்மிகா!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு அமைந்த முதல் கன்னட படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கிரிக் பார்ட்டி’. அதன் பிறகு தெலுங்கில் இவருக்கு அமைந்த முதல் படமும் மெகா ஹிட்டானது. அது தான் ‘கீதா கோவிந்தம்’.

விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த இப்படத்தில் ‘இன்கேம் இன்கேம்’ பாடல் தான் ராஷ்மிகா மந்தனாவை வேர்ல்ட் லெவலில் ஃபேமஸ் ஆக்கியது. ராஷ்மிகா தமிழில் அறிமுகமான முதல் படமே கார்த்தியுடன் தான். அது தான் ‘சுல்தான்’. சமீபத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடித்த ‘புஷ்பா’ முதல் பாகம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸானது.

இப்போது, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஹிந்தியில் இரண்டு படங்களும், தெலுங்கில் இரண்டு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. இது தவிர வம்சி இயக்கும் ‘விஜய் 66’யில் ராஷ்மிகா நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், ‘ஃபிலிம்ஃபேர்’ இதழுக்காக எடுக்கப்பட்ட ராஷ்மிகாவின் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது. இந்த ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

Share.